ஏற்றுமதிச் சந்தையை இலக்காகக் கொண்டு இலங்கைக்கு அந்நிய செலாவணியைக் கொண்டு வர நடவடிக்கை – உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
Sunday, February 20th, 2022
ஏற்றுமதிச் சந்தையை இலக்காகக் கொண்டு இலங்கைக்கு அந்நிய செலாவணியைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்காக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
341 உள்ளூராட்சி அமைப்புகளுக்கு சர்வதேச சந்தைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோரின் பொருளாதாரத்தை உயர்த்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேவையான உள்ளூராட்சி மன்றங்களில் இருந்து கிராமிய உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|
|


