ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டு தாக்குத விவகாரம் – பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் அகியோர் விடுதலை!

Friday, February 18th, 2022

ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டு தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நாமல் பலல்லே, ஆதித்ய பட்டபெந்திகே மற்றும் மொஹமட் இஸ்சதீன் ஆகிய மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக, துல்லியமான புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்த போதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை மூலம், கடமையை நிறைவேற்றத் தவறியமை உள்ளிட்ட 855 குற்றச்சாட்டின்கீழ், சட்டமா அதிபரால், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது சம்பந்தமாக தொடரப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளை அடுத்து முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த போதிலும் ஈஸ்டர் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மீது குற்றவியல் புறக்கணிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: