ஏப்ரல் 21 தாக்குதல் விவகாரம் : வெளிநாடுகளில் கைதான நால்வரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!
Monday, March 15th, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் வெளிநாடுகளில் கைதுசெய்யப்பட்டுள்ள மேலும் நான்கு இலங்கையர்களையும், நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
முன்பதாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 5 நாடுகளில், 54 இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 50 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஏனைய நான்கு இலங்கையர்களையும், நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
படுகொலை செய்யப்பட்ட இடத்துக்கு அரைக்காற்சட்டையுடன் அநுர அதிகாலை வந்தார்! - மன்றில் சி.ஐ.டி. அ...
பஸ் வண்டிகளில் GPS தொழில்நுட்பம் - அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா
மத்திய வங்கியின் நாணயத்தாள் குறித்த அறிவிப்பு!
|
|
|


