படு­கொலை செய்­யப்­பட்ட இடத்­துக்கு அரைக்காற்சட்டையுடன் அநுர அதி­காலை வந்­தார்! – மன்றில் சி.ஐ.டி. அறிக்­கை

Friday, June 10th, 2016

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­ கொலை செய்­யப்­பட்ட இடத்­துக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேன­நா­யக்க அதி­காலை வேளையில் அரைக்­காற்­சட்­டை­யுடன் வந்துள்ளார். இது குறித்து எம்­மிடம் சாட்­சி­யங்கள் உள்­ளன. இந்த விட­யத்தை விசா­ரணை செய்யும் போது நாம் அநுர சேன நா­யக்­கவின் சார­தி­யாக கட­மை­யாற்­றிய பொலிஸ் உத்தியோகத்­த­ரையும் விசா­ரணை செய்தோம்.

இதன்­போது குறித்த பொலிஸ் சார­திக்கு எந்த விட­யத்தை எப்­படி வாக்குமூலா­மாக வழங்க வேண்டும் என்­பதை அனுர சேன­நா­யக்க சொல்­லிக்­கொ­டுத்­துள்­ளதை எம்மால் அறிந்­து­கொள்ள முடிந்­தது.

எனவே சந்­தேக நப­ரான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிணையில் விடுதலையானால் சாட்சிகளை இப்­படி கலைத்­து­வி­டுவார் . எனவே அது விசா­ர­ணைக்கு பாதிப்­பாக அமையும் என அரசின் சிரேஷ்ட சட்­ட­வாதி டிலான் ரத்­நா­யக்க நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்­னி­லையில் தெரி­வித்தார்

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணை நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்துக்கொள்ளப்­பட்­டது.

இதன்­போது இந்த விவ­கா­ரத்தில் விசா­ர­ணை­களை மூடி மறைக்­கவும் கொலை சதி முயற்சியுடன் தொடர்­பு­பட்­டுள்­ள­தா­கவும் சந்­தே­கிக்­கப்­பட்டு கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய குற்­ற­வியல் பொறுப்­ப­தி­காரி சுமித் சம்­பிக்க பெரேரா, முன்னாள் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க ஆகியோருக்­கு பிணை வழங்­கு­மாறு முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­வித்து வாதிடும் போதே சிரேஷ்ட சட்­ட­வாதி இதனைச் சுட்­டிக்­காட்­டினார்;

வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­காரம் நேற்று வழமைப் போன்று காலை 10.00 மணி­ய­ளவில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்டது. இதன்­போது சந்­தேக நபர்களின் சட்­டத்­த­ர­ணி­களின் கால தாமதம் கார­ண­மாக வழக்­கா­னது 20 நிமி­டங்கள் ஒத்தி வைக்­கப்­ப­டு­வ­தாக நீதிவான் நிஸாந்த பீரி­ஸினால் அறி­விக்­கப்ப்ட்ட்து. எனினும் வழக்­கா­னது மீண்டும் சுமார் 2 மணி நேரங்களின் பின்­ன­ரேயே விசா­ர­ணைக்கு வந்­தது.

இதன்­போது சந்­தேக நபர்­னான முன்னாள் நார­ஹேன்­பிட்டி குற்­ற­வியல் பொறுப்­ப­தி­காரி சுமித் சம்­பிக்க பெரேரா, மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேன­ந­யக்க ஆகியோர் சிறைச்­சாலை அதி­கா­ரிகள் ஊடக மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர்

விசா­ர­ணை­யா­ளர்­க­ளான குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் சார்பில் மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரவீந்­திர, விசா­ரணை அதி­கா­ரி­க­ளான பிரே­ம­தி­லக, ரத்­ன­பி­ரிய அகியோர் மன்றில் பிர­சன்­ன­மா­கினர். அவர்கள் சார்பில் அரசின் சிரேஷ்ட சட்­ட­வாதி டிலான் ரத்­ந­யக்க மன்ரில் ஆஜ­ரானார்

இந் நிலையில் முத­லா­வது சந்­தேக நப­ரான பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் சம்­பிக்க பெரேரா சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அஜித் பத்­தி­ர­ணவும், சந்­தேக நப­ரான அனுர சேன­நா­யக்க சார்பில் சிரேஷ்ட ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனில் சில்­வாவும் மன்றில் பிர­சன்­ன­ம­கி­யி­ருந்­தனர். பாதிக்­கப்­பட்ட தரப்­பான வஸீம் தாஜுதீன் குடும்­பத்­தினர் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி மிஸ்பாஹ் சத்தார் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.இந்நிலையில் விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­ன­போது, குற்ற­ப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ரணை அதி­கா­ரி­களால் மேல­திக விசா­ரணை அறிக்­கை­யொன்று நீதி­வா­னிடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

கடந்த 14 நாட்­க­ளாக முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் பல்­வேறு விட­யங்கள் தெரியவந்துள்­ளன. வஸீம் தாஜுதீன் விவ­கா­ரத்தில் முதலில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த அதி­கா­ரி­க­ளுக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேன­நா­யக்க அழுத்தம் கொடுத்துள்ள்மை உறு­தி­யா­கி­றது. அத்­துடன் வாக்கு மூலம் பெறும் போதும் அதிலும் அவர் தலை­யீடு செய்து அழுத்­தங்­களை பிர­யோ­கித்­துள்ளார்.

இத­னை­விட முத­லா­வது சந்­தேக நப­ரான சுமித் சம்­பிக்க பெரேரா, தாஜுதீன் விவ­காரம் குறித்து எமக்கு அளித்த விளக்கம் அனைத்தும் பொய்­யா­னவை என்­பது சாட்­சி­யங்கள் ஊடாக தெரியவந்­துள்­ளது. எனவே இவர்கள் இரு­வரும் விசா­ர­ணையை மூடி மறைத்­துள்­ளமை உறுதி. எனினும் மனிதப் படு­கொ­லையை ஏன் இவர்கள் விபத்­தாக காட்ட வேண்டும், இதற்­கான அவசியம் என்ன என்ற இடத்­தி­லேயே தற்போ­தைய விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த கொலை­யுடன் இவர்­க­ளுக்கு சதி முயற்சி குற்றச்சாட்டு உள்ள நிலையில் அந்த சதி கொலையின் பின்னர் செய்­யப்­பட்­டதா அல்­லது கொலையின் முன்னர் பிர­தான சந்­தேக நபருடன் இணைந்து செய்­யப்­பட்­டதா என்பதை வெளிப்­ப­டுத்த விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன.

இதற்­காக மொபிடல் நிறு­வ­னத்தின் ஒத்­து­ழைப்பு தற்­போது கிடைக்க ஆரம்­பித்­துள்­ளது’ என மேல­திக அறிக்­கையில் உள்ள விட­யங்­களை அரசின் சிரேஷ்ட சட்­ட­வாதி டிலான் ரத்­நா­யக்க மன்­றுக்­கு அறி­வித்தார்

இத­னை­விட அந்த மேல­திக அறிக்­கையில் 2012 அம் ஆண்டு மே 16 ஆம் திகதி இரவு 11 மணியாகும் போதும் நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தில் கட­மையில் இருந்த பொலிஸ் பரி­சோ­தகர் குண­சே­க­ரகே பிய­சேன என்­ப­வரும் வாக்­கு மூலம் ஒன்­றினை வழங்­கி­யுள்­ள­தாக கூரி அவரின் வாக்கு மூலத்தில் கூறப்­பட்ட விட­யங்­களும் இணைக்­கப்ப்ட்­டி­ருந்­தன.

அந்த வாக்கு மூலத்தில் சாலிகா மைதா­னப்­ப­கு­தியில் கார் ஒன்று எரி­வது குறித்து தனக்கு கடமை நேரத்தில் கேள்­விப்­பட்­டதாக­வும், 17 ஆம் திகதி அதி­காலை 1.00 மணிக்கு தான் கழிவறை சென்­ர­தா­கவும் சென்று வரும் போது பொலிஸ் நிலை­யத்தின் வாயில் அருகே கறுப்பு நிற கார் ஒன்று நின்­றி­ருப்­பதை அவ­தா­னித்­த­தா­கவும் அதன்­போதே பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநா­யக்க பொலிஸ் நிலையம் வந்­துள்­ளதை தெரிந்­து­கொன்­ட­தா­கவும் பின்னர் அவர் காரில் ஏறி வெளி­யேறிச் செல்­வ­தையும் தான் கண்­ட­தா­கவும் தெரி­வித்­த­தாக குறிப்பிடப்ப்ட்­டி­ருந்­தது.

இந்நிலையில் வஸீமின் பிரேதம் மீது முதலில் பிரேத பரி­சோ­தனை நடத்­திய வைத்­தியர் ஆனந்த சம­ர­சே­க­ர­வுக்கு எதி­ராக இலங்கை மருத்­துவசபை முன்­னெ­டுத்­துள்ள விச­ர­ணைகள் தொடர்பில் நீதிவான் கேள்வி எழுப்­பினார்.

இதன்­போது இலங்கை மருத்­துவ சபை சார்பில் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சட்­டத்­த­ரணி, கடந்த நான்காம் திகதி ஆனத்த சம­ர­சே­க­ர­வுக்கு எதி­ரான குற்றப் பத்­தி­ரிகை மருத்­துவ சபையின் விசா­ரணை மன்­றினால் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஜூலை 23 ஆம் திகதி முதல் அவ­ருக்கு எதி­ரான விசா­ர­ணைகள் இடம்­பெறும் எனவும் தெரி­வித்தார். அத்­துடன் ஆனந்த சம­ர­சே­க­ரவின் உத­வி­யா­ளர்­க­ளான வைத்­தியர் இரா­ஜ­குரு, வைத்­தியர் அம­ர­ரத்ன ஆகிய வைத்­தி­யர்­க­ளுக்கு எதி­ராக எதிர்­வரும் ஜூலை 7 ஆம் திகதி முதல் விசா­ரணை இடம்­பெறும் என சுட்டிக்காட்டினார்

இத­னை­ய­டுத்து முத­லா­வது சந்­தேக நப­ரான சுமித் சம்­பிக்க பெரேர சார்பில் மன்றில் ஆஜராகியி­ருந்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அஜித் பத்­தி­ரன தமது தரப்பு வாதத்தை முன்­வைத்தார்.

தனது சேவை பெறு­ந­ரான சுமித் சம்­பிக்க பெரேர குற்­ற­வியல் சட்­டத்தின் 127 அவது பிரிவின் கீழ் நீதி­வா­னுக்கு இர­க­சிய வாக்கு மூலம் வழங்க தொடர்ந்தும் தயா­ராக உள்­ள­தா­கவும் அதற்காக அனு­மதி வழங்­கு­மாறும் அவர் நீதி­வானை கேட்­டுக்­கொண்டார்

இத­னை­ய­டுத்து அனுர சேன­நா­யக்­கவின் சட்­டத்­த­ர­ணி­யான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனில் சில்வா தனது தரப்பு வாததை முன்­வைத்தார்

‘நான் எனது சேவை பெறுநர் சார்பில் மீண்டும் இன்று பிணை கோரு­கிறேன். கடந்த தவணை வாதங்­க­ளுக்கு மேல­தி­க­மாக இன்று எனது சேவை பெறு­ந­ருக்கு ஏன் பிணை வழங்­க வேண்டும் என்பது குறித்த மேலும் சில கார­ணி­களை முன்­வைக்­கின்றேன்.

எனது சேவை பெறு­ந­ருக்கு பிணை மறுக்­கப்­பட கடந்த தவ­ணையில் இரு கார­ணி­களை நீதிவானா­கிய நீங்கள் முன்­வைத்­தீர்கள். ஒன்று சாட்­சி­க­ளுக்கு அச்­சுறுத்தல். மற்­றை­யது அரசிய­ல­மைப்பில் உள்ள சந்­தேக நபரின் உயிர் வாழும் உரி­மையை உறுதி செய்தல் ஆகியனவாகும்.

உண்­மையில் முத­லா­வது கார­ணியின் பால் பார்­ப்­போ­மாக இருந்தால் இது­வரை இந்த வழக்கில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள பெரும்­பா­லான சாட்­சி­யங்கள் பொலிஸ் சாட்­சி­யங்கள். அதில் அனைத்தும் எனது சேவை­ பெ­று­ந­ருக்கு எதி­ர­கவே வழங்­கப்பட்­டுள்­ளன. அப்­படி இருக்­கையில் நாம் அவர்கள் வாக்கு மூலம் வழங்­கும் போது செய்­யாத இடை­யூறும், அச்­சு­றுத்­தலும் இனி மேல் எப்­படி செய்­வது தற்­போது இந்த விவ­கா­ரத்தில் அறி­வியல் ரீதி­யி­லான தட­யங்கள் மிக முக்­கி­ய­மா­னவை. வைத்­திய சபையின் விசா­ர­ணை­யிலோ, அல்­லது மொபிட்டல் நிறு­வனம் வழங்கும் தக­வல்­க­ளிலோ, கனடா நிறு­வ­னத்தில் ஆய்வு செய்­யப்பட இருக்கும் சி.சி.ரி.வி. காட்சிகள் தொடர்­பி­லான விவ­கா­ரத்­திலோ எப்­படி எனது சேவை பெறுனர் தாக்கம் செலுத்துவார். இது சாத்­தி­ய­மற்­றது இத­னை­விட எனது சேவை பெறுநர் சம்பவம் இடம்­பெற்ற தினத்தில் அந்த இடத்தில் சிவில் உடையில் இருந்­த­தாக குற்றப் புல்­னாய்வுப் பிரிவு முன்வைக்கும் குற்­றச்சாட்டு தொடர்பில் உரிய விசா­ர­ணை­களை செய்யும் முக­மாக எனது சேவை பெறு­னரே அவரது சாரதி, பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் ஆகி­யோரை பொலி­ஸாரிடம் அனுப்பி வாக்குமூலம் வழங்கச் செய்து விசாரணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கினார். அப்­படி இருக்­கையில் அவர் எப்­படி விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழ்ங்­காது சாட்­சி­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுப்பார் எனக் கூற முடியும்?

அத்­துடன் வாழும் உரிமை தொடர்பில் நாமே தீர்­ம­னிக்­க வேண்டும். சிறையில் எமக்கு எதிரிகள் பலர் உள்ள நிலையில் எமது வீட்­டி­லேயே ஒரு மூலையில் இருப்­பதே எமக்கு பாதுகாப்­பா­கும். எமது பாது­காப்பு குறித்து நம் பொருப்­பேற்­கிரோம். அப்­படி இருக்­கையில் அந்த விட­யமும் பிணை மறுக்­கப்­பட ஏது­வான காரணி என கொள்ள முடி­யாது.இந்த வழக்கை பொறுத்­த­வரை பிரனைச் சட்­டத்தின் கீழ் விஷேட நில­மை­களை பிணை பெற முன்­வைக்க வேண்­டி­ய­தில்லை. எனினும் விஷேட கார­ணி­க­ளையும் நான் முன்­வைக்­கின்றேன். அதற்­காக எனது சேவை பெறுநர் வைத்­தியர் சூல பெரே­ரா­விடம் சிகிச்சைப் பெற வேண்­டி­யுள்­ளதை நான் மன்றின் கவ­னத்­துக்கு கொண்­டு­வ­ரு­கிறேன். எனவே இந்த வழக்கை பொறுத்­த­வரை பிணை வழ்­னக்க ஏது­வான அத்­தனை விட­யங்­களும் உள்­ளன என்­பதை இந்த மன்­றுக்கு சுட்டிக்காட்டுகிறேன். ஆகவே எனது சேவை பெறுன­ருக்கு பிணை­ய­ளிக்க கோரு­கிறேன். என்றார்

இதற்கு அரச சட்­ட­வாதி டிலான் ரத்­நா­யக்க கடும் எதிர்ப்பு வெளி­யிட்டார். நாம் இந்த வழக்கின் பார­தூரம், குற்றச் சாட்டு மற்றும் சாட்சிப் பாது­காப்பு குறித்து அனைத்து விட­யங்­க­ளையும் ஆராய்ந்தே இந்த எதிர்ப்பை முன்­வைக்­கின்றோம்

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை செய்­யப்­பட்ட இடத்­துக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க அதி­காலை வேளையில் அரைக்­காற்­சட்­டை­யுடன் சம்­பவ இடத்­துக்கு வந்­துள்ளார். இது குறித்து எம்­மிடம் சாட்­சி­யங்கள் உள்­ளன. இந்த விடயத்தை விசா­ரணை செய்யும் போது நாம் அனுர சேன­நா­யக்­கவின் சார­தி­யாக கடமையாற்றிய பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரையும் விசா­ரணை செய்தோம். இதன்­போது குறித்த பொலிஸ் சாரதிக்கு எந்த விட­யத்தை எப்­படி வாக்கு மூலா­மாக வழங்க வேண்டும் என்­பதை அனுர சேன­நா­யக்க சொல்­லிக்­கொ­டுத்­துள்­ளதை எம்மால் அறிந்­து­கொள்ள முடிந்­தது. எனவே சந்­தேக நப­ரான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிணையில் விடு­த­லை­யானால் சாட்சிகளை இப்­படி கலைத்­து­வி­டுவார் . எனவே அது விசா­ர­ணைக்கு பாதிப்­பாக அமையும்

அத்­துடன் சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக குற்­ற­வி­யல் சட்­டத்தின் 113,296 இன் கீழ் குற்றச் சாட்டு உள்­ளது. அதா­வது கொலைக்கு சதித் திட்டம் தீட்­டி­யமை தொடர்­பா­னது. உண்­மையில் இந்த சதி வஸீம் கொலை செய்­யப்­பட முன்னர் தீட்­டப்­பட்­டதா அல்­லது அவ­ரது கொலையின் பின்னர் அதனை மறைக்க தீட்­டப்­பட்­டதா என்­பது குறித்தே நாம் தற்­போது விசா­ரிக்­கின்றோம்

அத்­துடன் முதல் சந்­தேக நப­ரான சுமித் சம்­பிக்க பெரேர இர­க­சிய வாக்கு மூலம் வழ­ங்­கு­வதில் எமக்கு எந்த சிக்­கலும் இல்லை. அவ­ரது வாக்கு மூலத்­துக்கு அமைய நாம் பிணை தொடர்பில் பின்னர் ஆலோ­சிக்­கலாம். என்றார்

இத­னை­ய­டுத்து நீதிவான் திறந்த மன்றை அழைத்து தனது உத்­த­ர­வு­களை வாசித்தார்

முத­லா­வது சந்­தேக நப­ரான பொலிஸ் அதி­காரி கடந்த 3 தவ­ணை­களில் இர­க­சிய வாக்கு மூலம் வழங்க கோரு­கிறார். இதனை என்னால் இப்­போது நிரா­க­ரிக்க முடி­யாது. இன்று நான்கா­வது தட­வை­யா­கவும் கோரிக்கை முன்­வைத்­துள்ளார். அவர் சுயா­தீ­ன­மாக குற்­ற­வியல் சட்டத்தின் 127 ஆவது பிரிவின் கீழ் வாக்கு மூலம் வழங்கத் தயார் எனில் நாளை ( இன்று) காலை 10.00 மணிக்கு அவரை இந்த மன்றில் முன்­னி­லைப்­ப­டுத்த சிறைச்சாலை அதிகரிகளுக்கு உத்தரவிடுகிறேன்.

அத்துடன் அரச தரப்பு மற்றும் சந்தேக நபர்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட இரு­த­ரப்­பு வாதங்களை நன் கருத்தில் கொண்­டேன். அதன்படி சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க இந்த மன்று மறுக்கின்றது.

எனினும் அனுர சேனநாயக்க சார்பில் அவரது உடல் நிலைமை குறித்து முன்வைக்கப்பட்ட விடயங்களை இம்மன்று கருத்தில்கொண்டு கடந்த தவணை சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு இந்த மன்று உத்தர்வு ஒன்றினை பிறப்பித்தது.

இதன்படி சிறைச்சாலை வைத்திய பணிப்பளர் ஒரு கடிததை எமக்கு அனுப்பியுள்ளார். அதில் அனுரவின் வைத்தியரான சூல பெரேரா முன்னிலையில் அவரை ஆஜர்ச செய்த பின்னர் முடிவை அறிப்பதாக கூறியுள்ளார். அப்படியானால் அனுர சேனநாயக்கவை உடனடியாக வைத்தியர் சூல பெரேராவின் முன்னிலையில் ஆஜர் செய்து அறிக்கை பெற்­று அதன்பின்னர் சிறைச்சாலை வைத்தியசலையில் அவருக்கு சிகிச்சை வழங்க முடியுமா முடியாதா என்பதை உள்ளடக்கிய அறிக்கையை இந்த மன்றுக்கு அறிவிக்க உத்தரவிடுகிறேன். அதன்பின்னர் பிணை வழங்­கு­வது குறித்து ஆராயலாம் அதுவரை சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் ஜூன் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தர்வு பிறப்பிக்கிறேன்எ ன்றார்.

Related posts: