பாவனை இன்றிக் காணப்படும் பால் சேகரிப்பு நிலையம்!

Sunday, January 20th, 2019

கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கே.என்.57, கிராம அலுவலர் பிரிவின் புன்னைநீராவிக் கிராமத்தில் கடந்த நான்கு வருடமாக பால் விநியோகத்துக்கு என்று சீரமைப்புச் செய்யப்பட்டுள்ள 30 அடி நீளமான கட்டடம் எவ்வித பாவனையும் இன்றி காணப்படுகின்றது.

பால் சபைக்கான கட்டடம் கதவு போடப்பட்டு மின்விசிறிகள் பொருத்தப்பட்டு பல வருட காலமாக பாவனையற்று காணப்படுவதால் கதவினை பூட்டி விட்டுப் பலர் மது அருந்துவதுடன் இரவு வேளைகளில் பல சமூக விரோதச் செயற்பாடுகளும் இடம்பெறுவதாகப் பலரும் ஆதங்கள் வெளியிட்டுள்ளனர்.

எனவே கட்டடம் அமையப்பெற்றுள்ள இடத்திலிருந்து நூறு மீற்றர் தூரத்தில் புன்னைநீராவி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அமைந்துள்ளதோடு ஐம்பது மீற்றர் தூரத்தில் புன்னைநீராவி கலைமகள் சிறுவர் முன்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், பொதுநோக்கு மண்டபம் ஆகியனவும் அமைந்துள்ளன.

எனவே பலநூறு மாணவர்களின் நலன் கருதியும் கிராமத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட முதியோர்கள் மக்களின் கோரிக்கைக்கு அமையவும் இந்தக் கட்டடத்தை தங்களுக்கு நூல் நிலையமாக ஏற்படுத்தித் தருமாறு பலர் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தக் கட்டடம் நூலகமாக மாற்றப்படும் பட்சத்தில் பலரும் பலவகை நன்மை பெறக்கூடியதாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related posts: