ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சாட்சியமளிக்க கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்!
Wednesday, September 2nd, 2020
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளை வியாழைக்கிழமை சாட்சியமளிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் மட்டக்களப்பு சிறையில் இருந்து கொழும்புக்கு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கடந்த 2015 ஒக்டோபர் 11 திகதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் சிறையிலுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் உயிர்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பிள்ளையான் நாளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக இன்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


