காரைநகர் பிரதேசத்தின் அபிவிருத்தியை தடுக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு – குற்றம் சுமத்துகிறார் ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளர் கண்ணன்!

Monday, May 21st, 2018

மக்கள் நலன்சார் திட்டங்களை முன்னெடுப்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அக்கறை செலுத்துவதுகிடையாது. அதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுத்தாலும் அதற்கு இடையூறாகவே இருந்துவருகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளர் கண்ணன் (ரஜனி) தெரிவித்துள்ளார்.

DD தொலைக்காட்சி சேவையின் மக்களுடன் நாம் மக்களுக்காக நாம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களிலும் சரி தற்போதும் சரி தமிழ் தேசியக் கூட்டமைப்பானது எமது காரைநகர் பிரதேசத்தின் ஆட்சி அதிகாரத்தை மேற்கொண்டுவருகின்றது. ஆனாலும் எமது காரநகர் பிரதேசத்தின் முக்கிய தேவைப்பாடுகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் பிரதேச சபையில் எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு மக்கள் அபிவிருத்திக்காக முன்வைத்த பல திட்டங்கைளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களின்பால் செல்லவிடாது முடக்கியிருந்தனர்.

நாம் காரைநகர் பிரதேசத்தின் எதிர்க்கட்சியாக இருந்துகொண்டாலும் அன்று எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்ததன் காரணமாக இப்பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பையும் மீறி பல அபிவிருத்தித் திட்டங்களை குறிப்பாக இப்பிரதேசத்தின் அடிப்படை தேவைகளான குடிநீர், வாழ்வாதாரம் உள்ளிட்ட தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்து கொடுத்திருக்கின்றோம்.

ஆனால் இன்றும் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை தம்வசம் கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எமது காரைநகர் பகுதியின் அபிவிருத்தியை வெறும் ஊடக செய்திக்காக மட்டும் தான் செய்துவருகின்றார்கள்.

தேர்தல் கால வாக்குறுதிகளால் அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும் இவர்கள் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்க்கையிலோ அன்றி நிரந்தரமான அபிவிருத்திக்கான முன்னகர்வுகளிலோ இற்றைவரை அக்கறை செலுதிதியது கிடையாது .

ஆனாலும் நாம் தேர்தல்கால வாக்குறுதியாக வழங்கிய உறுதிமொழிகளையும் தமிழ் மக்களின் வாழ்வியலுக்கான தீர்வுகளையும் தேவைப்பாடுகளையும் யதார்த்தபூர்வமான வழிமுறையில் முன்னெடுத்துச் சென்று எமது மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவுசெய்து வருகின்றோம் என்றார்.

Related posts: