ஏப்ரல் மாத இறுதிக்குள் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறு வெளியாகும் – கல்வி அமைச்சர் பீரிஸ்!
Sunday, April 4th, 2021
கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் 2021 ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் செயற்பாடுகளில் தாமதம் ஏற்படாது என்றும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரப்பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிடப்படவுள்ளன.
இதனையடுத்து ஜூலை மாதத்தில் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கான உயர்தர வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளதாக ஜிஎல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
0000
Related posts:
விமான நிலையத்தில் தீவிர சோதனை!
வெளிநாடுகளில் பட்டம் பெற்றவர்களை நேர்முகத் தேர்வு வைத்து அவர்கள் பின்தங்கிய பகுதிகளில் அரச சேவையில் ...
வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த தாழமுக்கம் வலுவடையும் சாத்தியம் -வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக...
|
|
|


