வெளிநாடுகளில் பட்டம் பெற்றவர்களை நேர்முகத் தேர்வு வைத்து அவர்கள் பின்தங்கிய பகுதிகளில் அரச சேவையில் இணைக்க தீர்மானம்!

Thursday, September 17th, 2020

சர்வதேச நாடுகளில் பட்டம் பெற்ற மாணவர்களை இலங்கை அரச சேவையில் உள்ளீர்ப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நாயகம் எப்.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

அண்மையில் அரச நியமனங்களுக்கு உள்வாங்கப்பட்டிருந்த 60 ஆயிரம் பட்டதாரிகளில் வெளிநாட்டில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் நிராகரிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும் குறித்த பட்டதாரிகளிடம் இருந்து 4,100 விண்ணப்பங்கள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நாயகம் எப்.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர்களை அரச சேவையில் உள்ளீர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதனடிப்படையில் எதிர்காலத்தில் நேர்முகத் தேர்வு வைத்து அவர்கள் பின்தங்கிய பகுதிகளில் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட கற்பித்தல் பணிகளுக்காக உள்ளீர்க்கப்படவுள்ளனர் என்றும் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நாயகம் சர்வதேச கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு நாட்டில் தொழிலைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: