ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 1 ஆயிரத்து 728 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – மக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை !

Tuesday, April 25th, 2023

மேல் மாகாணத்தில் நாளை (26) முதல் டெங்கு தடுப்பு வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 17,728 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இவ்வருடம் இதுவரையில் இருபத்தி ஏழாயிரத்து எண்ணூற்று பதினான்கு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த நோயாளர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்தின் கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். தற்போது DEN 2 மற்றும் DEN 3 வைரஸ்கள் அதிகளவில் பரவி வருவதாகவும் சுகாதார பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

நெருக்கடியான சூழ்நிலையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை - புகையிரத ...
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் கன உலோகங்கள் இல்லை - பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக சுகாதார அமைச்சு ...
நல்லூர் ஆலயத்திற்குள் கத்தோலிக்க மதகுருக்களை அனுமதித்தமை மத நல்லிணக்கத்திற்கான ஆரம்ப - யாழ் மறை மா...

மக்களின் போராட்டத்திற்கு கிடைத்தது வெற்றி : பூர்வீக நிலங்களை முத்தமிட்டனர் கேப்பாபிலவு மக்கள்!
பண்டிகைக் காலத்தை கருத்திற்கொண்டு கடுமையான சுகாதார நடைமுறைகள் - ஜனாதிபதி தலைமையிலான செயலணி கூட்டத்தி...
கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் 53...