எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறையுடன் மணல் மற்றும் சரளைகள் கொண்டு செல்வோருக்கு அனுமதி – புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம்!
Saturday, May 2nd, 2020
மணல், மண் மற்றும் சரளைகளை கொண்டு செல்வதற்கான அனுமதி வழங்கல் 11 ஆம் திகதி முதல் எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறையுடன் மேற்கொள்ளப்படும் என்று புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதியன்று வெளியான சுற்றறிக்கையின் கீழ், இதற்கான போக்குவரத்து அனுமதி பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதொடு, வருதை தரும் விண்ணப்பதாரிகள் தனிமனித இடைவெளியை பேணுவது அவசியம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதுள்ள பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் பணியகத்திற்கு வாடிக்கையாளர்களின் வருகையை மட்டுப்படுத்தவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
பணியகத்தின் கனிம உரிமைகள் பணிப்பாளர் அல்லது தொடர்புடைய பிராந்திய அகழ்வாராய்ச்சி பொறியாளரை தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
நாட்டிலேற்பட்ட கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனுமதிகள் இடை நிறுத்தப்பட்டிருந்தமையால் குறித்த தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த பல ஆயிரம் பேர் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு அவளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


