எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை அடுத்த இரண்டு நாட்களில் பிரதமரிடம் கையளிக்கப்படும் – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!
Sunday, April 9th, 2023
உள்ளுராட்சி அதிகார சபைகளை எல்லை நிர்ணயம் செய்வதற்கான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கையளிக்கப்படவுள்ளது.
உள்ளூராட்சிக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையி பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இந்த அறிக்கை கையளிக்கப்படும் என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அறிக்கையை கையளித்ததன் பின்னர், மக்களுக்கு அறிவிப்பதற்காக விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டும் என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள 8,000 க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பதே குழுவின் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
பெரும்பான்மையைக் கொண்ட தரப்பினரின் கருத்துக்களுக்கு மாத்திரம் செவிசாய்ப்பது ஜனநாயகம் ஆகாது – மகிந்த...
ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 மாதங்கள் நிறைவு!
கல்வியிலே சிறந்த மாவட்டமென கூறிக்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்போமேயானால் யார் குற்றவா...
|
|
|


