ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 மாதங்கள் நிறைவு!

Saturday, September 21st, 2019


கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டின் 3 கத்தோலிக்க தேவாலயங்கள், 3 கொழும்பின் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களுக்கு பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21) ஐந்து மாதங்கள் நிறைவடைகிறது.

இந்த பயங்கரவாத தாக்குதலில் 250 க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், சுமார் 500 பேர் காயமடைந்தனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னர், நாடு பூராகவும் கடந்த காலத்தில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இதன்போது பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பலர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 5 மாதங்கள் நிறைவடைந்துள்ள இன்றைய தினத்தில் குறித்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட தேவாலயங்களிலும் மற்றும் நாட்டின் ஏனைய தேவாலயங்களை கேந்திரமாக கொண்டு விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

எவ்வாறாயினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய பல்வேறு விசாரணை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ள போதும், தாக்குதலுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு இதுவரை முழுமையான பரிகாரங்களோ நீதியோ கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:


மாணவி வித்தியாவின் தாயாருக்கு சந்தேக நபர்களின் உறவினர்களால் அச்சுறுத்தல்  : மன்றில் தெரிவிப்பு!
‘முடக்கம்’ மக்கள் வாழ்வாதாரத்திற்கு விதிக்கப்படும் அடக்குமுறையாக அமையும் -இராணுவத் தளபதி ஜெனரல் சவேந...
வறுத்தலைவிளான் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிலும் விபத்து - ஒருவர் ஸ்தலத்திலேயே பலி!