பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலி – இதுவரை 2289 பேர் கைது!

Tuesday, June 4th, 2019

கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தினத்திலிருந்து இன்று வரை 2,289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பிருப்பதாக சந்தேகத்தில் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் பலர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு 2,289 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 1,665 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் 423 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 211 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts:


மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டும் - சபாநாயகர் மஹிந...
மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி - சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறி...
வவுனியா மாவட்டத்தில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல் - பொது மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிர...