எல்லை நிர்ணயவிவாதத்திற்கு பின்னர் தேர்தல் குறித்து தீர்மானம்!

மாகாண சபை தேர்தலை புதிய முறையிலா அல்லது பழைய முறையிலா நடாத்துவது என்பது தொடர்பில் புதிய முறையின் கீழான எல்லை நிர்ணயம் குறித்த விவாதத்திற்கு பின்னர் தீர்மானம் ஒன்றினை எட்ட பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எல்லை நிர்ணய அறிக்கையானது கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, அது குறித்த விவாதத்திற்கு பின்னர் தீர்மானம் ஒன்றுக்கு வர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோர் தலைமையில் கூடிய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
கழிவுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு பிரித்தானியா உதவி!
பொறியியல் பீடங்களுக்கு அதிக மாணவர்களை உள்ளீர்க்கை - கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ்!
வவுனியா வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தின் நால்வர் சடலங்களாக மீட்பு – திவிர விசாரணையில் பொலிசார்!
|
|