எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 17 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து ஊற்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு!

Wednesday, September 27th, 2023

எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 17 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து ஊற்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாபட்டிணத்தில் இருந்து கடந்த 13ஆம் திகதி மீன்பிடித்த மூன்று விசைப்படகையும் அதிலிருந்த 17 மீனவர்களையும் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து கைது செய்திருந்தனர்.

மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சாதாரண சிறைத் தண்டணை என்ற நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கினால் முற்றாக அழித்தொழிக்கப்படும் -அமைச்சர் சரத்வீரசேகர எச்சரிக்கை!
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் வீழ்ச்சி - கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு பொதுமக்கள...
சந்தையில் நிலவும் கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலைக்கு விற்பனையாகும் அரிசி விற்பனை - விவசாய அமை...