கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் வீழ்ச்சி – கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்து!

Thursday, October 14th, 2021

அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் மீண்டும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்காது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சில பகுதிகளில் முகக்கவசம் அணிவதை பொதுமக்கள் தவிர்ப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர்  சுகாதார பழக்கவழங்கங்களை பேணாத பட்சத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மற்றும் தற்போது அமுலில் உள்ள சுகாதார ஒழுங்கு விதிகள் குறித்து நாளை (15) வௌ்ளிக்கிழமை ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ள COVID-19 ஒழிப்பிற்கான தேசிய செயலணி கூட்டத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


தோழர் குணாளனின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போர்த்தி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி...
உயர் தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் நடத்துவதில் தாமதம் ஏற்படும் சூழ்நிலை - கல்வி அமைச்சு தெரிவ...
பத்து அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் - இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்கள் ஜனாதிபதியால் நியமனம்...