வடக்கு மாகாணசபை தவிர ஏனைய மாகாணங்களுக்கு நிதி குறைப்பு!

Wednesday, November 16th, 2016

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாண சபையை தவிர ஏனைய அனைத்து மாகாணங்களுக்கும் 9 பில்லியன் ரூபா குறைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.மூலதன செலவு ஆயிரம் மில்லியனும் புனராவர்தன செலவு 7 ஆயிரத்து 800 மில்லியனும் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்க இரண்டு தரப்பினரும் பங்களிப்பு வழங்கியதாக கூறப்படும் நிலையில், இப்படியான விடயம் எப்படி நடந்தது என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

வரவு செலவுத்திட்டத்தில் பிரதான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதால், இந்த விடயம் தவறியிருக்கலாம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதின் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் இருக்குமா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், அப்படி ஒன்று இருக்கக் கூடும் என கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி நீர் கட்டணத்தை தீர்த்த விதத்தில் இந்த பிரச்சினையையும் ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட்டு தீர்வு ஒன்றை வழங்குவார்கள்.சில அபிவிருத்தி திட்டங்களுக்காக பெரு நகர அமைச்சு காணிகளை சுவீகரிக்கும் போது, உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை பறித்து செயற்படுவது போல் தெரிகின்றது.இதற்கு எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லை என்றும் இருசு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

8541

Related posts: