வேலணைப் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் நிறைவேற்றம்!

Wednesday, November 11th, 2020

தீவகம் தெற்கு வேலணைப் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட பிரதேச சபையான குறித்த சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளை இன்றையதினம்(11) சபையின் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி சபையில் சமர்ப்பித்திருந்தார்.

இதையடுத்து சபை உறுப்பிர்னர்களிடம் விவாதத்திற்கு விடப்பட்ட வரவுசெலவு திட்ட முன்மொழிவு சபையில் கடுமையான வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 6 உறுப்பினர்களையும், தமிழரசுக் கட்சியின் 8 உறுப்பினர்களையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2 உறுப்பினர்களையும், தமிழ் தேசிய காங்கிரஸ், தமிழர் விடுதலை கூட்டணி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கியதேசியக் கட்சி ஆகியவற்றின் தலா ஒரு உறுப்பிர் என 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றம் ஶ்ரீலங்கா பெரமுன,  ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தமிழர் விடுதலை கூட்டணி ஆகியவற்றின் உறுப்பிர்கள் 10 பேர் ஆதரவாகவும் தமிழரசுக்கட்சி ஐக்கியதேசியக் கட்சி ஆகியன எதிராகவும் வாக்களித்திருந்த நிலையில் இலங்கை தமிழ் தேசியக் காங்கிரஸ்    கட்சி நடுநிலைமை வகித்திருந்த நிலையில்  பாதீடு நிறைவேறியிருப்பது குறிப்பிடத்தக்கது..

இது தொடர்பில் சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி கருத்து தெரிவிக்கையில் – பிரதேச சபைகளின் பொறுப்பு பிரதேசத்தின் சுகாதாரம் மற்றும் அபிவிருத்தி சார்ந்த திட்டங்களை முன்னெடுப்பதாகும். எமது சபையானது மிக வருமானம் குறைந்த சபையாக காணப்படுவதால் இருக்கின்ற வருமானங்களை கொண்டே சபையின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதுமட்டுமல்லாதது வருமானங்களை ஈட்டிக்கொள்ளும் வகையிலான பதிய திட்டங்களையும் நாம் முன்னெடுக்கவுள்ளோம். இதற்காக மத்திய அரசுடன் பேசி புதிய மக்கள் நலத் திட்டங்களை கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். குறிப்பாக எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மத்திய அரசில் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருப்பதனால் அவரூடாக நாம் எமது பகுதிக்கான பல்வேறு வருவாயை ஈட்டக்கூடிய திட்டங்களை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை ஏற்படுத்தவுள்ளோம்.

அத்துடன் மக்களின் நலன்களை கருத்திற்கொண்டு இன்று எமது சபையில் என்னால் முன்வைக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Related posts:


பயிற்சிபெற்ற ஆசிரியர்களே எதிர்காலத்தில் பாடசாலைக்கு இணைத்துக்கொள்ளப்படுவர் ௲ பிரதமர்!
டீசல் விநியோகத்தை மட்டுப்படுத்தப்படுத்த தீர்மானம் - பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலா...
வெளிநாடுகளில் இருந்து சட்டரீதியாக பணம் அனுப்பும் இலங்கையர்களுக்கு வாகனம் வாங்க வரிச்சலுகை - வெளிநாட்...