எரிவாயு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எரிவாயு பகிர்ந்தளிப்பு – லாஃப் நிறுவனம் அறிவிப்பு!

Sunday, June 5th, 2022

சில மாதங்களுக்கு பின்னர் எரிவாயுவை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு இன்று எரிவாயு பகிரப்பட்டதாக லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும் தங்களது வர்த்தக நிலையத்திற்கு எரிவாயு கிடைக்கும் வரையில் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

லாஃப் நிறுவனத்துக்கான எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று நேற்று நாட்டை வந்தடைந்தது. குறித்த கப்பலில் 3,500 மெட்ரிக் எரிவாயு கொண்டு வரப்பட்டுள்ளதாக லாஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளைமறுதினம்முதல் சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

2,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்தது. அதன் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக இன்றும் நாளையும் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொது மக்களை கோரியுள்ளது.

இதேவேளை இவ்வாறான பின்னணியில் சந்தையில் மண்ணெண்ணெய்க்கான கேள்வி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


வலி தெற்கு பிரதேசபையே எமது வயிற்றில் அடிக்காதே – ஜனாதிபதி பிரதமரிடம் நீதி கெட்டு மருதனார்மட வியாபாரி...
காய்ச்சல், இருமல் இருக்கும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் – பெற்றோரிடம் இராஜாங்க அமைச்சர் ...
உணவு பாதுகாப்பு மேம்பட்டிருந்தாலும் கூலித்தொழிலாளர்களிடையே வீழ்ச்சியடைந்துள்ளது – ஐ.நாவின் பயிர் மற்...