உணவு பாதுகாப்பு மேம்பட்டிருந்தாலும் கூலித்தொழிலாளர்களிடையே வீழ்ச்சியடைந்துள்ளது – ஐ.நாவின் பயிர் மற்றும் உணவு பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையில் தகவல்!

Tuesday, June 13th, 2023

இலங்கையில் உணவு பாதுகாப்பு அனைத்து மாகாணங்களிலும் மேம்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த பெப்ரவரி – மார்ச் மாதங்களில் ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டம், விவசாய அமைப்பு, ஐக்கிய நாடுகளின் உலக நாடுகள் இணைந்து மேற்கொண்ட பயிர் மற்றும் உணவு பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் 3.9 மில்லியன் மக்கள் அல்லது இலங்கை மக்கள் தொகையில் 17 சதவீதமானோர் மிதமான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டு ஜூன் – ஜூலை மாத காலப்பகுதியில் காணப்பட்ட நிலைமையில் இருந்து சுமார் 40 சதவீதம் குறைவாகும்.

இந்தநிலையில் 10 ஆயிரம் பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர். இது கடந்த ஆண்டு 66 ஆயிரம் பேராக இருந்தது.

உணவு பாதுகாப்பின் முன்னேற்றத்துக்கு, உணவுப் பொருட்களின் விலை குறைப்பு மற்றும் அறுவடை காலத்தில் விவசாய சமூகங்களிடையே மேம்பட்ட வருமானம் ஆகியவை காரணமாக இருக்கலாம்.

இருப்பினும் சில மாவட்டங்களில் குறிப்பாக கிளிநொச்சி, நுவரெலியா, மன்னார், மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்றவற்றில் உணவு பாதுகாப்பின்மை அதிகமாகவே உள்ளது.

பெருந்தோட்டத் துறையில் உள்ள தேயிலைத் தோட்டச் சமூகங்களுக்குள்ளும், சமுர்த்தி போன்ற சமூக உதவித் திட்டங்களில் தங்கியிருக்கும் தினசரி கூலித் தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்கள் மத்தியிலும் மிக உயர்ந்த அளவிலான கடுமையான உணவு பாதுகாப்பின்மை தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது

000

Related posts: