எரிவாயு பற்றாக்குறையால் உணவக உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் – அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத்!
Friday, May 27th, 2022
சந்தைக்கு வெளியிடப்படும் எரிவாயு விநியோகம் பிற்போடப்பட்டதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உணவக உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு உரிய அதிகாரிகள் துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் சங்கத்தின் தலைவரான அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக 40% உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், உணவு வழங்கிய விநியோகஸ்தர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எரிவாயு நிறுவனங்களே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், இந்த நெருக்கடிக்கு வழிவகுத்த முடிவெடுப்பதிலுள்ள அனைத்து குறைபாடுகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் எரிவாயு நிறுவனங்களும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் இதனைத் தீர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
000
Related posts:
|
|
|


