சந்திரிகாவின் மகுடிக்கு ஆடுகின்றார் விக்னேஸ்வரன் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, April 12th, 2024

வடக்கின் முன்னாள் முதல்லர் விக்னேஸ்வரன் சிறீலங்கா சதந்திர கட்சியின் முகவராக செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது என தெரிவித்துள்ள ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் ஜனாதிபதி தேர்தல் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பான அவரது தற்போதைய நிலைப்பாடு அதை உறுதி செய்வதுபோன்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (12.04.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை ஒரு பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கை முன்னெடுத்த வடக்கின் முன்னாள் முதலமைச்சர்  விக்னேஸ்வரன் தற்போது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற வேட்பாளர்கள் எழுத்து மூலமாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தமிழ் மக்களுக்கு என்னென்ன விடயங்களை செயல்படுத்துவீர்கள் என்பதை சர்வதேச ராஜதந்திரிகள் முன்னிலையில் குறிப்பாக அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளின் ராஜேந்திரன் முன்னிலை எழுத்து மூலம் தருமாறு கூறிருக்கின்றார்.

முன்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் பொது வேட்பாளர் தேவை இல்லை என்று கூறியிருந்தார். இதற்கு அரசாங்க செலவில் அவர்களது தயவில் வாழ்கின்றவர் அப்படித்தான் சொல்வார் என்று சம்பந்தரை கிண்டலும் கேலியும் செய்திருந்தார் இந்த விக்னேஸ்வரன்.

இவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருந்த விக்னேஸ்வரன் அன்று ஜனாதிபதியாக இருந்த சந்திர்க்கா அம்மையார் 2000 ஆம் ஆண்டு கொண்டுவந்த விடயங்கள் நல்ல விடயங்கள் என்றும் அதிலே பல சிறந்த விடயங்கள் இருக்கின்றன என்றும் சொல்லி இருக்கின்றார்.

இதிலிருந்து இவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினுடைய குறிப்பாக சந்திரிகா அம்மையாரின் ஒரு முகவராக மாறியிருக்கிறாரா என்ற சந்தேகங்கள் எழுகின்’றது.

இதேவேளை சர்வதேசத்தின் பங்களிப்புடன் புலிகளும் அன்றைய அரச ஆட்சியாளர்களும் இடையே 2002 இல் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். அதேபோன்று இந்நாட்டில் பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு அவை நடைமுறையாகாத வரலாறும் உள்ளன.

இதேவேளை ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் வடக்கின் அரியணையில் ஏறிய விக்னேஸ்வரன் ஆளுமை இன்மையால் தனது ஆட்சியில் இருந்து அமைச்சர்கள் செய்த மோசடிகளால் அவரது தலைமையிலான ஆட்சியை கலைப்பதற்காக அவைத் தலைவராலேயே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட வரலாறும் இருக்கின்றது.

அதுமட்டுமல்லாது ஆளுநர் சரியில்லை என்று கூறி தமக்கேற்ற ஆளுநரையும் கொண்டுவந்திரந்தார்கள. ஆனால் ஊழலையும் சபைக்காக வந்த பெரு நிதியை மீிள அனுப்பியதையும் தவிர வேறொன்றையும் சாதித்திருக்கவில்லை.

பின்னர் கட்சியிலிருந்து வெளியேறி புது கூட்டுக்களை அமைத்து தனது சுயநலங்களை மேற்கொண்டுவருவதும் அனைவரும் அறிந்ததே.

இவ்வாறாக  உறுதியான அரசியல் நிலைப்பாடில்லாத ஆளுமையற்ற விக்னேஸ்வரன் இப்போது சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர் கதையை கூறியிருப்பது மக்களுக்கு மேலும் அழிவுகளையே கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: