எரிபொருள் விலை குறைப்பு : பேருந்துக் கட்டணம் குறைக்கப்படுமா?
Friday, November 16th, 2018எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து பயண கட்டணங்களை குறைக்க முடியாது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
பேருந்து தொழிற்துறையை நடாத்திச் செல்வதற்கான செலவீனங்கள் அதிகரித்துள்ள நிலையில் பேருந்து பயண கட்டணங்களை குறைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் பேருந்து பயண கட்டணங்களை குறைப்பது தொடர்பில் தமது நிறைவேற்றுக் குழு கூடி இறுதி தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக அகில இலங்கை பேருந்து நிறுவனங்களின் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அதன் பிரதான செயலாளர் அஞ்ஜன ப்ரியன்ஜித் இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை வரும் மலேசிய பிரதமர்!
உயர்தரப் பரீட்சைக்கு இரண்டாம் தடவை தோற்றும் மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!
உள்ளுர் தொழில்துறை தொடர்ந்து இயங்குவதற்கு அவசியமான மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சீனாவின் உதவ...
|
|