எரிபொருள் விலை அதிகரிப்பு எதிரொலி – இ.போ.சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இரத்து!
Thursday, May 17th, 2018
இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இரத்து செய்யப்படுவதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதிகள், பேருந்து நடத்துநர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட அனைவரது விடுமுறைகளும் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள காரணத்தால் இ.போ.ச. ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிடும் வரையில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.
இதேவேளை தனியார் பேருந்து உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு முகங்கொடுக்கும் விதமாக 24 மணித்தியாலங்களும் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக அந்த சபை அறிவித்துள்ளது.
நாளாந்த கால அட்டவணைக்கு அமைவாக அல்லாமல் பயணிகளின் தேவைக்கு அமைய இ.போ.ச பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|
|


