எரிபொருள் விலை அதிகரிப்பு, – பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரானது – பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல எச்சரிக்கை!

எரிபொருள் விலை அதிகரிப்பு, நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரானது என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
விலை அதிகரிப்பானது, குறைவடைந்துள்ள பணவீக்கத்தின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் வேலை செய்யும் மக்கள் தங்களது வேதனத்தில் 20 முதல் 40 சதவீதத்தை போக்குவரத்துக்காக மாத்திரம் பயன்படுத்துவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கையை அச்சுறுத்தும் இனங்காணப்படாத நோய்: மக்களுக்கு எச்சரிக்கை!
அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் 1670 மில்லியன் வருவாய்!
தொழிற்சங்கங்கள் அரசியல் கோணத்தில் இல்லாமல் நாடு முகங்கொடுத்துள்ள நெருக்கடி நிலை குறித்து சிந்திக்க வ...
|
|