எரிபொருள் – சமையல் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு ஏழுமாதங்களாகும் – அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிப்பு!
Monday, March 14th, 2022
தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கும் தீர்வை காண்பதற்கு ஏழு மாதங்களாகும் என அமைச்சர் காமினிலொகுகே தெரிவித்துள்ளார்.
சர்வதேச அரங்கில் உருவாகியுள்ள நிலையை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பொருளாதாரத்தின் வீழ்ச்சி காரணமாக நாட்டிற்கு டொலரை கொண்டுவருவதற்காக எங்களால் தேங்காயை விற்க முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டொலரை நாட்டிற்கு கொண்டுவரும் நெருக்கடியின் ஆரம்பத்திலிருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையை ஏற்றுமதியை பலப்படுத்துவதன் மூலமும் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு ஜனாதிபதி முயல்கின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கத்திற்கு ஏழுஎட்டுமாதங்கள் எடுக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கை சுகாதாரத்துறை நவீனமயப்படுத்தப்படும் - ஜனாதிபதி!
தென்னை முறிந்து வீழ்ந்ததால் மாணவன் காயம் - மீசாலையில் சம்பவம்!
கைத்தொழில் துறையினருக்கு தேவையான மூலப்பொருட்களை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை - அமைச்சர் விமல் ...
|
|
|


