இலங்கை சுகாதாரத்துறை  நவீனமயப்படுத்தப்படும் – ஜனாதிபதி!

Wednesday, November 22nd, 2017

விஞ்ஞானத்துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கு ஏற்ப இலங்கை சுகாதாரத்துறையை நவீனமயப்படுத்தி உயர்ந்த தரத்துடன் முன்கொண்டு செல்வதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையிலுள்ள காட்சு சர்வதேச பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மருத்துவ ஆய்வுகூட தொழில் வல்லுநர்களின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தர்.

சுகாதாரத்துறையில் மிகவும் முக்கியமான பிரிவான மருத்துவ ஆய்வுகூட சேவையிலுள்ள தொழில் வல்லுநர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தி பட்டப்படிப்புவரை கொண்டு செல்வதற்குத் தேவையான வழிகள் நேற்று ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கை சுகாதார சேவையின் தரம் காரணமாக சர்வதேசத்தில் எமது நாட்டுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி இதற்காக சுகாதாரத்துறையிலுள்ள அனைத்து தொழில் வல்லுநர்களுக்கும் மக்களின் கௌரவம் கிடைக்குமென குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் நாடெங்கிலும் டெங்கு நோய் பரவிய சந்தர்ப்பத்தில் இரத்தப் பரிசோதனை சேவையை துரிதப்படுத்தி மருத்துவ ஆய்வுகூட தொழில் வல்லுநர்கள் வழங்கிய ஒத்துழைப்பை ஜனாதிபதி பாராட்டினார்.

இலவச சுகாதார சேவையைப் பலப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கேற்ப சுகாதாரத்துறையின் தரத்தையும் நியமங்களையும் மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Related posts: