இந்தியா, சீனாவுடனான இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை வெற்றி – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Tuesday, January 17th, 2023

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவுடன் தற்போதுவரை முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களை நோக்கும்போது, எமது பொருளாதாரத்தை சரியான பாதையில் தடமேற்றுவதற்காக நாம் முன்னெடுத்த செயற்பாடுகளை அவதானிக்க முடியும்.

மேலும், இந்தியா மற்றும் சீனாவின் கடன் மறுசீரமைப்பு ஒப்புதலை பெற வேண்டிய பணிகள் மாத்திரமே மீதமுள்ளன.

அந்த இரு நாடுகளுடனும் தற்போதுவரை முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதென கூறமுடியும்.

விரைவில் அது தொடர்பான பதில்கள் கிடைக்கப்பெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts:


வறிய மக்கள் வாழும் கிராமங்களுக்கு வலிந்து செய்து சேவையாற்றுபவர் டக்ளஸ் தேவானந்தா – ஈ.பி.டி.பியின் யா...
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரியை அதிகரியுங்கள் – உள்ளூர் உற்பத்தியாளர்கள் கோரிக்க...
பெண் தொழில்முனைவோருக்கான சிறந்த சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பது அவசியம் - வடக்கு மாகாண ஆளுநர் ...