மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!.

Monday, March 4th, 2024

மின்சாரம் மற்றும் எரிபொருட்கள் விநியோகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அதிவிசேட வர்த்தமானி மூலம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் அல்லது வழங்கல் ஆகியவற்றுடன் இணைந்த அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்ட இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறித்த சேவைகள் அத்தியாவசியமான சேவைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேவேளை  எரிபொருள் விலைகள் இன்று திங்கட்கிழமை திருத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையை மாதாந்தம் திருத்தியமைக்க கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மன்பதாக பெப்ரவரி மாத இறுதியில் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தாலும், அது இன்று இடம்பெறவுள்ளது

அத்துடன் கடந்த ஜனவரி 31 ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டிருந்ததுடன் ஒக்டேன் 92 பெற்றோல், ஒக்டேன் 95 பெற்றோல், சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: