எரிபொருள் இருப்பை மறைத்து நுகர்வோரை ஏமாற்றி அதிக விலைக்கு விற்பனை – நுகர்வோர் அதிகார சபை சுற்றிவளைப்பு!

Tuesday, March 22nd, 2022

எரிபொருள் இருப்புகளை மறைத்து நுகர்வோரை ஏமாற்றி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த கொபேகனே பகுதியிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தை சுற்றிவளைத்து நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குருநாகல் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குச் சென்ற பரிசோதகர்கள், டீசல் இல்லை எனக் கூறி 7,000 லீற்றர் சாதாரண டீசலும், 23,000 லீற்றர் சுப்பர் டீசலும் நிரப்பு நிலையத்தின் ஒரு பக்கத்தில் ஒரு லீற்றர் சாதாரண டீசல் 28.50 ரூபா அதிக விலைக்கு விற்கப்பட்டதைக் கண்டுபிடித்துள்ளனர்.

பொதுமக்கள் அளித்த முறைப்பாட்டின் பேரில் நேற்றுமதியம் சோதனை நடத்தப்பட்டது.

எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் எரிபொருள் தீர்ந்து விட்டதாகவும், அது கிடைக்கும் போது எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளருக்குச் சொந்தமான வேறு இடத்தில் அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்வதாகவும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: