எமது விழுமியங்களை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு நிர்வாக செயலாளர் ஐங்கரன்!

Monday, July 11th, 2016

கடந்த காலங்களில் கல்வியில் சிறந்த மாவட்டமாகவும் சிறந்த கல்வியாளா்களை உருவாக்குகின்ற மாவட்டமாகவும் காணப்பட்ட யாழ்.மாவட்டம் தற்பொழுது மதுபான விற்பனையும் சமூக சிரழிவுகளும் அதிகளவில் பெருகிவிட்ட மாவட்டமாக மாறியுள்ளது வேதனையளிக்கின்றது. இந்நிலையை மாற்றியமைப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் தெரிவித்துள்ளார்.

நவக்கிரி சரஸ்வதி முன்பள்ளி மாணவா்களின் வருடாந்த விளையாட்டு விழா நிகழ்வு  நேற்று (10) சனசமூக நிலையத் தலைவா் ஆறுமுகம் செல்வராசா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்று கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவா் தொடர்ந்து உரையாற்றுகையில் –

தற்போது எமது இளம் சமுதாயம் பாரம்பரிய கலாச்சாரங்களை பின்பற்றாது புலம் பெயர்ந்த தேசங்களின் கலாச்சாரங்கள் மீது ஈர்க்கப்படுகின்றார்கள். எமது இனத்திற்கென்ற ஒரு கலாச்சாரத்தினையும் பாரம்பரியத்தினையும் நாம் கொண்டிருக்கின்றோம். எமது எதிர்கால சந்ததியினா் எமது பாரம்பரிய கலாச்சாரங்களை கட்டிக்காக்க வேண்டிய தேவை தற்போது காணப்படுகின்றது.

IMG_0874

எந்தவொரு பிரதேசத்தினதும் அபிவிருத்திக்கு அந்த பிரதேசங்களில் வாழும் இளைஞா்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். ஆகவே எமது அன்புக்குரிய இளைஞா்களே உங்களது பிரதேசங்கள் உங்களுடைய பங்களிப்புக்களுடன் தான் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவேண்டும். இதற்காக நீங்கள் அனைவரும்

IMG_1001 (1)

அத்துடன் எமது மாவட்டத்தில் மதுபான விற்பனை நிலையங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பதுடன் பாடசாலைகள் வைத்தியசாலைகளிற்கு அருகாமையில் மதுபான விற்பனை நிலையங்கள் அமைந்திருக்கின்றன. குறிப்பாக புத்தூரில் அமைந்திருக்கும் மதுபான விற்பனை நிலையமானது  பாடசாலை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகம் வைத்தியசாலை ஆகியவற்றிற்கு அருகாமையிலே அமைந்திருக்கின்றது. ஆகவே இவ்வாறான மதுபான விற்பனை நிலையகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். குறித்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தப்படவேண்டும் என நான் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சபையில் பிரேரணை ஒன்றை (தீா்மான இல 15/29.05.2015) கொண்டுவந்திருந்தேன். இருந்தும் இதுவரைக்கும் அதனை நடைமுறைக்கு கொண்டுவரவில்லை.

IMG_0914

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் பொது இடங்களில் இருக்கும் மதுபான விற்பனை நிலையங்களை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என தெரிவித்திருப்பதாக பத்திரிகையில் செய்திகள் வெளிவந்திருந்தன. இருந்தும் புத்தூரில் அமைந்திருக்கும் மதுபான விற்பனை நிலையம் இதுவரை அகற்றப்படாமல் இருப்பது துறைசார் அதிகாரிகள் மீது மக்கள் பெரும் விசனம் கொண்டுள்ளனர். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ் மதுபான விற்பனை நிலையத்தினை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்ப்பதுடன்.

IMG_1078

எனிவருங்காலங்களில் வலிகாமம் கிழக்கில் மதுபான விற்பனை நிலையங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்ற தீா்மானத்தினையும் நான் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது சபையில் தீா்மானமாக நிறைவேற்றியிருக்கின்றேன் என்பதையும் நினைவுபடுத்த விரும்பகின்றேன். எமது இளைஞா்கள் மதுவிற்கு செலவு செய்யும் பணத்தினை தமது குடும்பத்திற்காகவும் தங்களுடைய கிராமத்திற்காகவும் பயனுள்ள தேவைகளிற்காகவும் செலவு செய்வதற்கு முன்வரவேண்டும் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.

IMG_1079

குறித்த முன்பள்ளிக் கட்டடத்திற்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளா் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவா்களுடைய நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்பட்டிருப்பதுடன் இவ்வருடமும் இம் முன்பள்ளிக்கு எமது கட்சியை சார்ந்த வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவா் தவராசா அவா்களுடைய பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில்  தளபாடக் கொள்வனவிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

IMG_1101

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வலிகிழக்கு நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரனது அனுசரணையுடன் நடைபெற்ற குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நவக்கிரி பாடசாலை அதிபர் ராதாகிருஸ்ணமூா்த்தி இடைக்காடு மகா வித்தியாலய பகுதித் தலைவா் இரங்கநாதன் நவக்கிரி கிராம உத்தியோகத்தர் சுதர்சன் நவக்கிரி வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர் கேசவன் நவக்கிரி பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஆர்.ஞானமாலா நம்பிக்கை நிதியம் நடாத்தும் ஆசிரியர் சங்கத் தலைவி திருமதி.என்.சாந்தரூபி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

IMG_1098

IMG_1047

IMG_0859

Related posts: