எமது ஆட்சி பலமாகவே இருக்கின்றது – பொருளாதாரப் பிரச்சினைக்கு முடிவு காண்பதே தமது நோக்கம் – அமைச்சர் நாமல் திட்டவட்டம்!

“எமது ஆட்சி பலமாகவே இருக்கின்றது. பொருளாதார ரீதியில்தான் நாம் சவால்களை எதிர்நோக்கியுள்ளோம் என தெரிவித்துள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆட்சி கவிழ ஒருபோதும் இடமளிக்கப்படாதென்றும் பொருளாதாரப் பிரச்சினைக்கு முடிவு காண்பதே தமது திட்டம் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
தேசிய அரசமைப்பது தொடர்பில் அரசு எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்றும், எதிரணி தரப்பிலிருந்தே இவ்வாறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் சர்வகட்சி மாநாடென்பது பொருத்தமான நடவடிக்கை. அதில் பங்கேற்று, கட்சி அரசியலுக்கு அப்பால், நாடு தொடர்பான யோசனைகளைக் கட்சிகள் முன்வைக்க வேண்டும் எனலும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கை ஒலிம்பிக் வீரர்களுக்கு ஜனாதிபதி கௌரவிப்பு!
பணிப்புறக்கணிப்பு - தபால் பரிமாற்ற நடவடிக்கைகள் பாதிப்பு!
நாட்டிற்கு எதிரான ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் குறித்து கௌரவ பிரதமர் மஹாசங்கத்தினருட...
|
|