எமது ஆட்சியில் அனைத்து சவால்களையும் முறியடித்தே தீருவோம் – அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் பிரதமர் தெரிவிப்பு!

எமது ஆட்சியில் இலங்கை எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் அனைத்தையும் முறியடித்தே தீருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் நேற்று சந்தித்துப் கலந்துரையாடியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச ரீதியான சவால், உள்நாட்டு அரசியல் சவால், கொரோனா வைரஸ் பெருந்தொற்று சவால், பொருளாதார ரீதியான சவால் என்று பல சவால்கள் இலங்கையைச் சூழ்ந்துள்ளன.
எனவே, அனைத்துச் சவால்களையும் முறியடித்து நாட்டு மக்களுடன் இணைந்து பயணிப்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்கா – இலங்கைக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இதன்போது கலந்துரையாடடி;பட்டமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
நாட்டின் விமான சேவை விஸ்தரிக்கப்படும் - பிரதமர்!
இலங்கை இளைஞர்களின் திறனை அபிவிருத்தி செய்ய அமெரிக்கா உதவி!
மலையக ஆசிரிய உதவியாளர்களை உள்ளீருங்கள் - இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் கல்வி அமைச்சுக்குக் கடிதம்!
|
|