எந்தவொரு தாக்குதலையும் அரசாங்கம் மன்னிப்பதில்லை – ரம்புக்கனை கலவரம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிடுமாறு சபாநாயகரிடம் நாமல் தெரிவிப்பு!
Wednesday, April 20th, 2022
எந்தவொரு தாக்குதலையும் அரசாங்கம் மன்னிப்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்னைறயதினம் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நேற்றையதினம் ரம்புக்கனை நகரில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு இதன்போது நாமல் ராஜபக்ச வருத்தம் வெளியிட்டுள்ளார்.
நேற்றைய சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணைக்கு மேலதிகமாக, முச்சக்கர வண்டிக்கு பொலிஸார் தீ வைப்பது மற்றும் எரிபொருள் பவுசரை சேதப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்களைக் காட்டுவது உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவும் சம்பவம் தொடர்பான காணொளிகள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
சபாநாயகர் தலையிட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை ஊடகங்களுக்கு வெளியிடுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
000
Related posts:
சுன்னாகம் இளைஞர் படுகொலை: சாட்சியங்களின் விபரம்!
தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான சலுகைகளை வழங்கவும்!
பொது மலசல கூடம் இரவில் பூட்டப்படுவதால் வெளிமாவட்ட பயணிகள் பாதிப்பு – மக்கள் குற்றச்சாட்டு!
|
|
|


