எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயார் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

கொவிட் தொற்றின் மூன்றாம் அலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் உலகளாவிய ரீதியாக ஏற்படும் மாற்றங்களுக்கு அமைய எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாரான நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம் பொது மக்களை பாதுகாத்து பொருளாதாரத்தை வலுவாக பேணும் அரசாங்கம் பல சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய தொற்று பரவல் காரணமாக பல நாடுகள் இக்கட்டான நிலைக்கு முகங்கொடுத்துள்ளன. இந்த நிலையில் அரசாங்கம் பல்வேறு தயார் நிலைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பில் 14ஆம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கப்பட வாய்ப்பு!
நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க அரசியல் பேதங்களைக் கடந்து செயற்படத் தயார் - புதிய பிரதமர் தினேஸ் குணவ...
போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை கண்டறிவதற்காக சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு இன்று முதல் நடைமுறை!
|
|