எதிர்வரும்14 ஆம் திகதி நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய மஹோற்சவம் ஆரம்பம்!

நயினாதீவு நாகபூ~ணி அம்மன் கோவில் 2018 விளம்பி வருட மஹோற்சவ விஞ்ஞாபனம் எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 16 நாட்கள் திருவிழா நடைபெறும்.
இதில் எதிர்வரும் 22 ஆம் திகதி சர்ப்பத் திருவிழாவும் மறுநாள் 23 ஆம் திகதி திருமஞ்சமும் 26 ஆம் திகதி பகல் கைலைக்காட்சியும் இரவு சப்பரமும் மறுநாள் 27 ஆம் திகதி புதன்கிழமை தேர்த்திருவிழாவும் 28 ஆம் திகதி முற்பகல் 10.46 மணிக்கு கங்காதரணியில் தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.
அன்றைய தினம் இரவு திருவூஞ்சல், கொடியிறக்கம் இடம்பெற்று மறுநாள் 29 ஆம் திகதி தெப்போற்சவம் (பூங்காவனம்) இடம்பெறும் என ஆலய அறங்காவலர் சபை அறிவித்துள்ளது.
Related posts:
கடந்த கால தவறுகளை ஆராய்ந்து அதன் பெறுபெறுகளை ஆதாரமாக கொண்டு இனிவருங்காலத்தை வெற்றிகொள்ள ஒன்றுபட்டு உ...
சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த ஒருவர் பொலிசாரால் கைது!
நுரைச்சோலை இரண்டாம் அலகு நாளைமுதல் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படும் - இலங்கை மின்சார சபை தெரிவி...
|
|