நுரைச்சோலை இரண்டாம் அலகு நாளைமுதல் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படும் – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Sunday, November 13th, 2022

திருத்த பணிகள் காரணமாக கடந்த ஜூன் மாதம் இடைநிறுத்தப்பட்ட நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகை நாளையதினம் மீண்டும் தேசிய மின்கட்டமைப்பில் இணைப்பதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் அதன் திருத்தப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய 300 மொகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது. இதன்படி, நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் ஊடாக 900 மொகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

இதேவேளை, மின்சார உற்பத்திக்காக 3 கப்பல்களில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்று அலகுகளும் செயற்படுமாயின் குறித்த நிலக்கரி 24 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு அலகுகள் மாத்திரம் இயங்குமாயின் 30 நாட்களுக்கு நிலக்கரி போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: