எதிர்வரும் 30 ஆம் திகதி மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல்!

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 30 ஆம் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மின்கட்டண திருத்தப் பட்டியல் இலங்கை மின்சார சபையினால் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அண்மையில் வழங்கப்பட்டது.
ஏற்கனவே ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் மின்கட்டணம் குறைக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு அறிவித்திருந்தது.
எனினும் இம்முறை 3 சதவீதம் மட்டுமே மின்சாரக் கட்டணம் குறைக்கப்படவுள்ளதாகவும், அதுவும் 0-90 அலகுகள் வரையில் மின்சார பாவணையாளர்களுக்கு மட்டுமே மின்கட்டணம் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அமரர் இராஜேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி!
இலங்கைக்கு வருகிறது ஆயுர்வேத தேங்காய் எண்ணெய்!
வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் கட்டாயமில்லை - சுகாதார பணிப்பாளர் நாயகம...
|
|