எதிர்வரும் 3 வாரங்களுக்குள் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் வழமைக்கு திரும்பும்!

Thursday, December 30th, 2021

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை நாளை (31) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்றின் விலையினை 60 ரூபாவினாலும், ஒரு கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலையினை 150 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியொன்று 1,345 ரூபாவுக்கும், 400 கிராம் பொதியொன்று 540 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் எனப் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை

எதிர்வரும் 3 வாரங்களுக்குள் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் வழமைக்கு திரும்பும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்

டிசம்பர் 05 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்டு இதுவரை எரிவாயு நிறைவடையாத சிலிண்டர்களை மீள கையேற்பதற்கு Laugfs எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

பச்சை நிற சீல் அகற்றப்பட்டாலும் எரிவாயு சிலிண்டர்களை மீள வழங்குவதற்கு விருப்பமான நுகர்வோருக்கு இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என Laugfs எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

Laugfs எரிவாயு விற்பனை முகாமையாளர் அல்லது விநியோக பிரதிநிதிகளை சந்தித்து சிலிண்டர்களை கையளிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

எரிவாயு சிலிண்டர்களை மீள வழங்கும் போது, அதன் நிறைக்கமைய பணத்தை மீள செலுத்துமாறும் அல்லது அதற்கேற்ற புதிய சிலிண்டர்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக Laugfs எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts: