ஏற்றிய பட்டமே எமனாகியது இளைஞனுக்கு: புத்தூரில் சோகம்!

Monday, January 8th, 2018

யாழ்பாணத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பரிதாபச்சாவடைந்துள்ளார். இச்சம்பவம் யாழ்ப்பாணம் புத்தூரில் இடம்பெற்றுள்ளார்.

புத்தூர் கிழக்கைச்சேர்ந்த பாஸ்கரன் தர்சன் (வயது 20) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞரும் நண்பர்களுமே சேர்ந்து பட்டம் ஏற்றியுள்ளனர். பட்டத்தில் மின்விழக்கு அலங்காரம் செய்திருந்தனர். அதற்காக பட்டத்தில் நூலுடன் வயரையும் இணைத்திருந்தனர். என்று கூறப்பட்டது.

வயர் மற்றும் நூலின் ஒரு பகுதியை கையில்வைத்துக்கொண்டு ஒருபகுதியை உயரழுத்த மினிணைப்புக்கு மேலாக வீசி மறு பக்கம் கொண்டு செல்ல முயன்றபோதே இந்த அசம்பாவிதம் நடந்ததென்று அந்தப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பெரும் சத்தம் ஒன்றும் கேட்டது என்றும் ஓடிச்சென்ற பார்த்த போது இளைஞர் தூக்கி வீசப்பட்டுக்காணப்பட்டார் என்றும் அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். வயரும் நூலும் உயர் மின்னளுத்தக்கம்பியிலேயே தொடுகையுற்றதாலேயே இளைஞனை மின்சாரம் தாக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

நினைவிழந்தவராகக்காணப்பட்ட இளைஞன் உடனடியாக அச்சவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்த யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட முன்னரே அவரது உயிர் பிரிந்தது எனக்கூறப்படுகிறது.

உயிரிளந்தவர் கடந்த முறை நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் தோற்றியவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நேற்றைய முன்தினமும் ஆவரங்கால் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பட்டமேற்றச்செல்சவதாகக் கூறிச்சென்ற 11 வயதுச்சிறுவன் ஓருவனின் சடலம் ஒன்றும் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: