எதிர்வரும் 15 ஆம் திகதி மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்படும் – நெடுஞ்சாலைகள் அமைச்சர் அறிவிப்பு!

Friday, January 14th, 2022

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மீரிகமமுதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேகப் பாதையின் இரண்டாம் கட்டம் 2022 ஜனவரி 15 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்..

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தின் நீளம் 40.91 கி.மீ.களாகும்.

சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்பைக் குறைப்பதற்காக கட்டப்பட்ட இந்த நெடுஞ்சாலை நகர்ப்புறங்களைத் தவிர்த்து, முக்கியமாக வெற்றுநிலங்கள் வழியாகச் செல்லும். 4 வழிப்பாதையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீதி மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான வீதி தற்போது இலங்கையின் மிக அழகிய அதிவேக நெடுஞ்சாலைப் பிரிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நெடுஞ்சாலை பகுதி உள்ளூர் ஒப்பந்ததாரர்களால் உள்ளூர் நிதியில் அமைக்கப்பட்டது. மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருநாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய இடங்களில் பணம் செலுத்தும் கவுன்ட்டர்களுடன் ஐந்து பரிமாற்ற நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 137 பில்லியன் செலவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நினைத்தவுடன் எவரையும் கைது செய்யும் அதிகாரத்தை எவரிடமும் நான் ஒப்படைக்கவில்லை – ஜனாதிபதி தெரிவிப்பு...
சிமெந்துக்கான தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது - ஏனைய பொருட்களுக்குமான தட்டுப்பாடும் ...
நியூசிலாந்தில் கத்தோலிக்க ஒருவரால் இஸ்லாமியர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டதற்கான எதிர்தாக்குதலா...

சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஜகான் செபகன் பிரதமருடன் சந்திப்பு!
எரிபொருள் விலை சூத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு - வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அறிவிப்பு!
ஆசியாவின் நீர்மின்னாற்றல் உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் சுடடட...