எரிபொருள் விலை சூத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு – வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அறிவிப்பு!

Sunday, February 13th, 2022

எரிபொருள் விலை சூத்திரம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் குறித்த எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பான வரைவினை எதிர்வரும் 21 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் கடந்த டிசம்பர் மாதம், 74 டொலராக காணப்பட்ட மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, தற்போது 94 டொலர் வரையில் அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டில் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பு தொடர்பில், கனியவள கூட்டுத்தாபனம், நிதி அமைச்சிடம் கோரியுள்ளது.

எனினும், இது குறித்து, தற்போதுவரையில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லையென அமைச்சர் உதய கம்மன்பில் தெரிவித்துள்ளார்.

சந்தையின் விலை அதிகரிப்பு நிலைமைக்கு ஏற்பவே, எவ்வளவு காலத்திற்கு இதனைத் தாங்கிக்கொள்ள முடியும் என்பது தீர்மானிக்கப்படும். தற்போதைய நிலைமையில் இது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

எவ்வாறிருப்பினும், இயன்றளவு மக்கள் மீது சுமையை சுமத்தாமலிருக்க முயற்சிப்பதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளாமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: