எதிர்வரும் புதனன்று பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் ஆராய்வு – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Monday, May 10th, 2021

நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்வதற்காக எதிர்வரும் புதன்கிழமை விசேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்தள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கொரோனா நெருக்கடி இருந்தபோதிலும் நாட்டின் இயல்பான நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்ள அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது.

இலங்கை தற்போது COVID 19 தொற்று நோயின் மிக மோசமான நிலையில் உள்ளது, மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 108 உயிரிழப்புகள் மற்றும் நாளாந்தம் 1800 க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு என தொடர்கிறது.

இதனால் பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. தொற்றைக் கட்டுப்படுத்த மிகவும் கடினமான நடவடிக்கைகளைச் செயல்படுத்த சுகாதாரத் துறையின் வேண்டுகோள்கள் அதிகரித்து வருகின்றன.

தற்போதைய தொற்றை கட்டுப்படுத்துவதில் உள்ள நிலைமைகளுக்கு மத்தியில், பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவெடுப்பதற்கு சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: