எதிர்வரும் புதனன்று எரிவாயு சிலிண்டர் வெடிப்பு தொடர்பிலான அறிக்கை வெளியிடப்படும் – ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு தெரிவிப்பு !
Monday, December 13th, 2021
அண்மையில் இடம்பெற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு அறிக்கைகளைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் இறுதி அறிக்கை தொகுக்கப்பட்டு வருவதாக குழுவின் தலைவரும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான சாந்த வல்பொல தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதன் இறுதி அறிக்கை புதன்கிழமைக்குள் நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும்.
குறித்த விடயம் தொடர்பில் கடந்த சில நாட்களாக 40 பிரிவினரிடம் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவில் எரிவாயு நிறுவனங்கள், இலங்கை தர நிர்ணய நிறுவனம், அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களம் மற்றும் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற வீடுகள் அடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


