எதிர்வரும் திங்கள்முதல் வழமைக்கு திரும்பும் பேருந்து சேவைகள் – இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!
Saturday, November 28th, 2020
எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் பேருந்துகள் வழமைபோல இயங்கும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி பேருந்து சேவையை நடத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, வார இறுதி நாட்களில் தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என்று தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வாரம் இயக்கப்படும் தொடருந்து சேவைகளே அடுத்த வாரமும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பேக்கரி உற்பத்திகளது விலையை அதிகரிக்க நடவடிக்கை!
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் போது அவர்கள் வசிக்கும் பகுதிகளில் நியமனங்கள் வழங்கப்பட்டால் பயனுள்ளத...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொழிவுகள் யாவும் ஊர்காவற்றுறை மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக ம...
|
|
|


