ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் போது அவர்கள் வசிக்கும் பகுதிகளில் நியமனங்கள் வழங்கப்பட்டால் பயனுள்ளதாக அமையும் – நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே வலியுறுத்து!

Wednesday, November 25th, 2020

மாகாண பாடசாலைகளில் வெற்றிடங்களை நிரப்ப வேண்டிய அவசியத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார வலியுறுத்தியுள்ளார்’

அத்துடன் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் போது சம்பந்தப்பட்ட உதவியாளர்கள் வசிக்கும் பகுதிகளில் நியமனங்கள் வழங்கப்பட்டால் அது பயனுள்ளதாக இருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்துள்ளார்

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி உறுப்பினராக இருப்பதால் நியமனங்களை இழந்த பட்டதாரிகளின் முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இந்த நியமனங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று பொது சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

மேலும் களனி பல்கலைக்கழகத்திற்கு பட்ட சான்றிதழ்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தால் பிற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்குவதிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் பட்டதாரிகளுக்கு வழங்கிய 14,500 நியமனங்களை உறுதிப்படுத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மதுரா விதானகே இதன்போது வலியுறுத்தியுள்ளார். இந்த நிறுவனங்களுக்கு உள்ளகக் கணக்காய்வாளர்ளை நியமிக்க வேண்டியதன் அவசியமும் இதன்போது விவாதிக்கப்பட்டது.

பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சக ஆலோசனைக் குழுவில் 83 புதிய உள்ளூராட்சி நிறுவனங்களை உள்ளீர்ப்பதற்கான திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பதும் இதற்காக மாவட்டக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன என்பதும் இதன்போது தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: