எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதிமுதல் 11 வரை சாதாரணதரப் பரீட்சைகள் இடம்பெறும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Monday, December 7th, 2020

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது..

இது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சாதாரணதரப் பரீட்சை மார்ச் மாதம் முதலாம் திகதிமுதல் 11 வரை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே க.பொ.த. சாதாரண பரீட்சையை அடுத்த ஆண்டு ஜனவரி 18 முதல் 27 வரை பரீட்சையை நடத்த முன்னர் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் நிலைமையையும் மாணவர்களின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டும் ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


அதிக போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக புதிய மின்னணு கட்டண அறிவீட்டு கூடங்களை அமைக்க நடவடிக்கை ...
இவ்வருடம் இலங்கை வருகைதந்த சுற்றுலாப் பயணிகளில் 24 வீதமானோர் ரஷ்யர் மற்றும் உக்ரேனியர் - இலங்கை சுற்...
இளைஞர்களை வீதிக்கு அழைக்கும் சூழ்ச்சி இடம்பெறுகின்றது - குற்றம்சாட்டுகின்றார் அமைச்சர் சுசில் பிரேமஜ...