எக்ஸ்-ப்ரெஸ் ஃபீடர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மன்னிப்பு கோரினார்!
 Friday, June 4th, 2021
        
                    Friday, June 4th, 2021
            
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தத்தால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, அந்த கப்பலின் இயக்கு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மன்னிப்பு கோரியுள்ளார்.
ஆயிரத்து 486 கொள்கலன்களுடன் பயணித்த குறித்த கப்பல், கடந்த மே மாதம் 20ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பற்றியது. இந்த தீயை கட்டுப்படுத்த 13 நாட்களாக முயற்சித்தநிலையில், இலங்கையின் கடற்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு பேட்டியொன்றை வழங்கியுள்ள எக்;ஸ்.ப்ரெஸ் ஃபீடர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சாமுவெல் யோஸ்கொவிட்ஸ், இந்த சம்பவம் குறித்து பெரிதும் வருத்தமடைந்திருப்பதாகவும் மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அனர்த்தம் காரணமாக இலங்கையின் கடற்சூழலுக்கும், மக்களது வாழ்தாரத்துக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளமையானது வருத்தமளிக்கிறது.
தற்போதைய நிலைமைகள் குறித்து கண்காணிப்பதற்காக சர்வதேச சரக்குக் கப்பல் உரிமை மாசுபாடு குறித்த சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த கப்பலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சுத்திகரிப்பதற்காக அதிபார கருவிகளை இலங்கைக்கு வழங்கி, இலங்கை அதிகாரிகளுடன் ஒத்துழைத்து செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        