எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் – விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவு!
Friday, April 26th, 2024
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பான விராசணை நேற்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிமன்றத்தினால் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, இந்த விசாரணைகள் தொடர்பான விபரங்களை முன்வைக்க ஒரு மாத கால அவகாசம் வழங்குமாறு கோரியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மேலதிக நீதவான், விசாரணைகளை உடனடியாக முடிக்குமாறு பொலிஸாருக்கு அறிவித்ததுடன்,
அதன் முன்னேற்றத்தை எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறும் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


